"அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை"
தேர்தலில் வாக்களிப்பதற்காக அரசு ஊழியர் ஒருவர் பணியிடத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்திற்கு 40 கிலோமீற்றர் அல்லது அதற்கும் குறைவான தூரம் இருந்தால் அரை நாள் விடுமுறையும்,
40-100 கிலோமீற்றர் வரை இருந்தால் குறைந்தபட்சம் ஒரு நாள் விடுமுறையும்,
100-150 கிலோமீற்றர் தூரம் என்றால் ஒன்றரை நாட்களும்,
150 கிலோமீற்றருக்கு அதிகமாக இருந்தால் 2 நாட்களும் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும்,
.
இதற்காகபணியாளர்கள் உரிய விடுமுறைக் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக நிறுவன தலைவரிடம் வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு விசேட விடுமுறைக்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும் விடுப்புக் காலத்தைக் காட்டும் ஆவணத்தைத் தயாரித்து பணியிடத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு நிறுவனங்களின் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி