இலங்கை ஜனாதிபதிக்கு குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள்
1.ஜனாதிபதியின் தலைமைப் பொறுப்புகள்
- அரசின் தலைவர்
- அரசாங்கத்தின் தலைவர்
- ஆட்சித்துறைத் தலைவர்
- அமைச்சரவையின் தலைவர்
- முப்படைகளின் தலைவர்
2.ஜனாதிபதியின் பொதுவான அதிகாரங்கள்
- போர்ப் பிரகடனம்
- சமாதான உடன்படிக்கை
- அரச இலச்சினை வைத்திருத்தல்
- காணி நன்கொடை வழங்கள்
- மானியங்கள் வழங்கள்
- வெளிநாடுகளில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்தல்
3.ஜனாதிபதியின் இஷ்டப்படியான நியமனங்கள்
- பிரதமர்
- அமைச்சரவை அமைச்சர்கள்
- இராஜாங்க அமைச்சர்கள்
- பிரதி அமைச்சர்கள்
- மாகாண ஆளுநர்கள்
- வெளிநாட்டுத் தூதுவர்கள்
- அமைச்சுக்களின் செயலாளர்கள்
- அமைச்சரவையின் செயலாளர்
- ஜனாதிபதியின் செயலாளர்
- பிரதமரின் செயலாளர்
- ஜனாதிபதி சட்டத்தரணிகள்
4.ஜனாதிபதியின் தெரிவில் அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரத்திலான நியமனங்கள்
- பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள்
- மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரும் நீதிபதிகளும்
- நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் (தவிசாளர் தவிர)
- சட்டமா அதிபர்
- பொலிஸ்மா அதிபர்
- கணக்காய்வாளர் நாயகம்
- பாராளுமன்ற செயலாளர் நாயகம்
- இலங்கை மத்திய வங்கி ஆளுநர்
5.அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசுப்படியான ஜனாதிபதியின் நியமனங்கள்
- தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள்
- பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள்
- பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள்
- நிதி ஆணைக்குழு உறுப்பினர்கள்
- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள்
- லஞ்சம், ஊழலைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு உறுப்பினர்கள்
- எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர்கள்
- தேசிய பெறுகை ஆணைக்குழு உறுப்பினர்கள்
- கணக்காய்வு சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள்
6.ஜனாதிபதியின் பாராளுமன்ற அதிகாரங்கள்
- பாராளுமன்றத்தை இரண்டரை வருடத்தின் பின்னர் கலைத்தல்
- பாராளுமன்ற அமர்வை 2 மாதங்கள் வரை இடை நிறுத்தல்
- கலைக்கப்பட்ட - அமர்வு நிறுத்தப்பட்ட பாராளுமன்றத்தை விரும்பினால் (3 நாட்களின் பின்னர்) மீண்டும் கூட்டுதல்
- பாராளுமன்றத்திற்கு செல்லல், செய்தியனுப்பல்
- பாராளுமன்றத்தை வருடத்தில் ஒரு தடவையாவது கூட்டல்
- பாராளுமன்ற சிறப்புரிமைகள், விடுபாட்டுரிமைகள், தத்துவங்களை அனுபவித்தல் (வாக்களித்தல் தவிர)
- பாராளுமன்றத்தில் அரச கொள்கை விளக்க உரையாற்றல்
- பாராளுமன்ற சம்பிரதாயபூர்வ அமர்வுக்கு தலைமை தாங்கல்
7.ஜனாதிபதியின் மக்கள் தீர்ப்பு தொடர்பான அதிகாரங்கள்
- அமைச்சரவை முடிவின்படி மக்கள் தீர்ப்பு நடத்தல்
- பாராளுமன்றம் நிராகரித்த (யாப்புத் திருத்தம் சாராத) சட்டமூலத்தை விரும்பினால் மக்கள் தீர்ப்புக்கு விடல்
- தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததென தான் கருதும் விடயத்தை மக்கள் தீர்ப்புக்கு விடல்
- மக்கள் தீர்ப்பின் முடிவுக்குக் கையொப்பமிடல்
8.ஜனாதிபதியின் அவசரகால அதிகாரங்கள்
- நாட்டில் அரசகால நிலையைப் பிரகடனம் செய்தல்
- அவசர காலத்தில் யாப்பைத் தவிர எந்தவொரு சட்டத்தையும் இடைநிறுத்தல், திருத்தல், புதிய விதிகளை ஆக்குதல்
9.ஜனாதிபதியின் நீதி அதிகாரங்கள்
- ஜனாதிபதிக்கு எதிராக எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கம் செய்ய முடியாது (அடிப்படை உரிமை மீறல் தவிர)
- குற்றவாளிகளுக்கு மன்னிப்பு, தண்டனைக் குறைப்பு
- விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்தல்
10.விசேட நிதியொதுக்கீட்டு அதிகாரங்கள்
- பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தால் பொதுச் சேவைகளுக்குத் தேவையான நிதியை திரட்டு நிதியிலிருந்து ஒதுக்கல்
- பாராளுமன்றத் தேர்தலுக்கு நிதி தேவையாயின் திரட்டு நிதியிலிருந்து வழங்கல்
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி