"முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான கல்வி அமைச்சின் சுற்றறிக்கை"
2025ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பித்தல் பாடசாலைகளில் 2025ம் ஆண்டில் சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கான வகுப்புக்கள் 2025.01.30 வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காக "பிள்ளைகளை இனங்காணும் நிகழ்ச்சித்திட்டம்" 2025.01.31 வெள்ளிக் கிழமையன்று ஆரம்பிக்கப்பட்டு 2025.02.17 செவ்வாய்கிழமை வரையான 10 நாட்களில் நிறைவு செல்லுவேண்டும்.
இக்காலத்தை உச்ச அளவில் பயன்படுத்தி மிகவும் நம்பகத் தன்மையுடன் கூடியதாக "பின்ளைகளை இளங்காணும் நிகழ்ச்சித்திட்டம்" நடைமுறைப்படுத்துவது அனைத்து அதிபர்களினதும் பொறுப்பாகும் என்பதை தயவாக அறியத்தருகின்றேன்” என குறிப்பிட்டு கல்வி அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி