"அரசு அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு"
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்திற்கும் ஜனாதிபதியிற்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ,
தமது ஆட்சியில் அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும், அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், அரசினது அனைத்து வேலைத்திட்டங்களும் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளினுடைய ஆதரவு மிகவும் அவசியமானது எனவும் , அரச அதிகாரிகளின் அனுபவமானது அதற்குப் பெரும் உறுதுணையாக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி