"உயர்தரப் பரீட்சைகளை நடாத்துவதில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் பரீட்சைகளுக்கு எதிராக மனு தாக்கல்"
உயர்தர பரீட்சைக்கான கல்வி காலமானது ( 39/2023 சுற்றறிக்கையின் படி 107 கல்வி நாட்களில் நிறைவு செய்யப்பட வேண்டும்) .
ஆனால் உயர்தர பரீட்சைக்கான கல்விக் காலம் நிறைவடைவதற்கு முன்னபதாக உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறி ஹன்சனி அழககோன் என்ற மாணவி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
மேலும் இம்மனுவின் பிரதிவாதிகளாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் கல்வி அமைச்சர் செல்வி ஹரிணி அமரசூரிய ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இம்மனுவினை எதிர்வரும் 12ஆம் திகதி ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி