Hot Posts

6/recent/ticker-posts

மின் கட்டணம் தொடர்பாக மின்சார சபையின் அறிவிப்பு

"மின் கட்டணம் தொடர்பாக மின்சார சபையின் அறிவிப்பு"

மின் கட்டணம் தொடர்பாக மின்சார சபையின் அறிவிப்பு


நாட்டில் பொதுத் தேர்தல் இடம் பெற்ற பிறகு புதிய பாராளுமன்ற அமர்விற்கு  பின்னரான காலப்பகுதியில்  ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்களை  நியமித்ததன் பின்னர்  மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

 

 06 மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற போதிலும், அது கடந்த அரசாங்கத்தில் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதுடன் தற்போதைய அரசாங்கம் அது தொடர்பாக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்


மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.  தற்பொழுது நாட்டில் நிலவுகின்ற சாதாரண சூழ்நிலையில் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் வகையில் மின்சாரக் கட்டணத்தையும்  குறைப்பதுவே புதிய அரசாங்கத்தின் பாரிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments