பாரிய அளவு குறைக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள்
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் அமைவாக எரிபொருள்களினது விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு பாரிய அளவு விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி 332 ரூபாவாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 311 ரூபா வாகவும,
307 ரூபாவாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 283 ரூபா வாகவும்,
352 ரூபாவாக காணப்பட்ட லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 319 ரூபாவாகவும்,
202 ரூபாவாக காணப்பட்ட மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 183 ரூபாவாகவும் பதிவாகியுள்ளன.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி