"பாடசாலை முறைகளிலும், பாடசாலை கல்வியிலும் முன்மொழியப்பட்டுள்ள சில மாற்றங்கள்"
கல்விச் சீர்திருத்தங்களின் பிரகாரம் அனைத்துப் பாடசாலைகளையும் மாகாண சபைகளின் கீழ் இயங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக கல்விக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள் என இருவகையான பாடசாலைகள் இனி பேணப்படாமல், கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் பாடசாலைகளின் மேற்பார்வை மற்றும் நிர்வாகம் மாகாண சபைகளுக்கு மாற்றப்படும் வகையில் சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
மாகாணசபையிலிருந்து மாகாணசபைக்கு மாறாத நிர்வாக முறைமையின் கீழ் அனைத்துப் பாடசாலைகளும் நடத்தப்பட வேண்டும் என குழு தீர்மானித்துள்ளதாகவும் உறுப்பினர் கூறுகிறார்.
பணம் உள்ளிட்ட சகல வசதிகளையும் செய்து கொடுக்கும்போது அநீதி இழைக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி