"இலங்கைக்கு மீண்டும் கொரோனா அச்சுறுத்தலா????"
கொவிட் அறிகுறிகளுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
PCR பரிசோதனையில் இவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, நாட்டில் வாழும் மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவுறுத்தியுள்ளார்.
JN 1 OMICRON உப பிறழ்வான புதிய கோவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவி வருகின்றமையே இதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது, தற்போது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழக ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவர் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கான சோதனைகள் தற்போது குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்படுவதன் காரணமாக, அதனுடைய உண்மையான தரவுகளைப் பெற முடியாதுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி