Ticker

6/recent/ticker-posts

Ad Code

இன்று முதல் விசேட போக்குவரத்து

"இன்று முதல் விசேட போக்குவரத்து"




நத்தார் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இந்த விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.


 அதன்படி இன்று முதல் 100 மேலதிக பஸ்கள் நீண்ட தூர சேவைகளுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ண ஹன்ச தெரிவித்தார்.



அத்துடன், பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நாளை (23) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்துப் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இதிபோலகே தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் விசேட நேர அட்டவணையின்படி இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இந்த அட்டவணை இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

close