"கல்வி மற்றும் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக புதிய பிரதமரின் நிலைப்பாடு"
கல்விக்காக அதிக நிதி ஒதுக்கங்களை மேற்கொள்வதற்கு தமது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களத்தின் மீது மக்களுக்கு எழுந்துள்ள அவநம்பிக்கையை நீக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்ததுள்ளார்.
அத்தோடு இதுவரைகாலமும் காலதாமதமாகி வரும் அனைத்து வித பரீட்சைகளின் பெறுபேறுகளையும் துரிதமாக வெளியிடுமாறும் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி