Hot Posts

6/recent/ticker-posts

"மாற்றங்களோடு உருவாக்கப்பட்டது இலங்கையின புதிய அமைச்சரவை"

மாற்றங்களோடு உருவாக்கப்பட்டது இலங்கையின புதிய அமைச்சரவை


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9வது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தெரிவானதன் பின்னர் தேசிய மக்கள் சக்தி இன்று புதிய அமைச்சரவையை உருவாக்கியுள்ளது அதன் அடிப்படையில்,


ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் கீழ் பாதுகாப்பு, நிதி, பொருளாதார அபிவிருத்தி, தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா, வலுசக்தி, விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் ஆகிய அமைச்சுக்களும்,


புதிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில்  கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம்,  பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி, சுகாதாரம்  ஆகிய அமைச்சுக்களும்,


விஜித ஹேரத்திற்கு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் தேசிய ஒருமைப்பாடு சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுசன ஊடக அமைச்சு, போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் சிவில் போக்குவரத்து சேவைகள் அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு, வெளி விவகார அமைச்சு, சுற்றாடல், வனஜீவராசிகள், வனவளத்துறை, நீர்ப்பாசனம், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறை ஆகிய அமைச்சுக்களும் வழங்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments