"கல்லீரலை பாதிக்கும் பெற்றோரின் கவனயீனம்"
இலங்கையில் தற்போது அதிகமான குழந்தைகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் ,அதற்கு பிரதான காரணமாக அமைவது அவர்கள் சுதவீன முற்றிருக்கும் வேளையில் அதிகமான பரசிட்டமால்களை வழங்குவதாலாகும் என வைத்தியர் ரவி ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வைத்தியரின் பரிந்துரை இன்றி குழந்தைகளுக்கு பாரசிட்டமாலை வழங்குவதால் அவர்களின் நிலைமை மேலும் மோசம் அடைவதுடன் அவர்களுடைய கல்லீரலும் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகளுக்கான மருந்துகளை வழங்குவது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக 0112686143 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி