"மீண்டும் முடங்குகிறது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்"
அரச சேவையில் பணியாற்றும் பல துறையினர் வேதன அதிகரிப்பை வழியுறுத்தி நாளை மற்றும் நாளை மறுதினம் (08, 09) சுகவீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்திருந்தனர் .
இந்த நிலையில், குறித்த சுகவீன போராட்டத்தில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நாளைய தினம் (08) பாடசாலைகள் வழமை போல் நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளதுடன் மாணவர்கள் பாடசாலைக்கு அவசியமாக வருகை தர வேண்டும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி