சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களை இலவசமாக பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சிறுவர்களுக்காக பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய விலங்கியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி