மேஷம்
தெய்வீகப் பயணங்கள் திருப்தி தரும். அரசியல்வாதிகள் ஆதரவால் நன்மைகள் நடக்கும். தன்னம்பிக்கை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
ரிஷபம்
வழக்கு விவகாரங்கள் தள்ளிப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது. நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும்.
மிதுனம்
பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றம் கிடைக்கும். நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் நல முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
கடகம்
வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சந்ததி விருத்தி உண்டாகும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
சிம்மம்
குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து சென்றால் அனுகூலமான நன்மைகளை அடையலாம்.
கன்னி
இன்றைய நாள் கழிவது யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். நீர்நிலைகளில் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
துலாம்
அரசு அதிகாரிகளின் ஆதரவு எப்போதும் இருக்கும். அரசு உயர் பதவிகள் தேடிவரும். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
தனுசு
தொழிலில் முதலீடுகளால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் இன்பம் பெருகும். புத்திர பாக்கியம் ஏற்படும். தெய்வீக சிந்தனை ஏற்படும்.
விருச்சிகம்
எதிர்பாராத விதமாக தனவரவும் குடும்ப சுகம் குறையும். புதிய முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.
மகரம்
பதவி அல்லது இடமாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே வேண்டாத மனக்கசப்பு உருவாகலாம்.
கும்பம்
பெண்களின் உதவியால் பெருமை அடைவீர்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர்.
மீனம்
உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு, தொழில், வியாபாரத்தில் பணவரவு என யோகங்கள் தரும் நாள். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி