2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 3மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதவுள்ளதுடன், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தப் போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 10 மில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனாகும் அணிக்கு 04 மில்லியன் டொலர் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 02 மில்லியன் டொலர் வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி