2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் திருத்தப்பட்ட திகதிகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட உரையொன்றை ஆற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பதால் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்தால், 2024 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான சாதரண தரப் பரீட்சையை 2024 மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஒத்திவைக்க நேரிடும்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி